சென்னை: பயணிகள் வரத்து குறைவால் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு உள்ளதால், போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால், ரயில்களில் பயணம் செய்வதற்கு பொதுமக்கள் முன்வர முடியாத சூழல் நிலவி வருகிறது. இதனால், பயணிகள் இன்றி ரயில் நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதன் காரணமாக சிறப்பு ரயில்களை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
அதன்படி, மே 25ம் தேதி புறப்படும் கோவை – ராமேஸ்வரம், ராமேஸ்வரம் – கோவை, புதுச்சேரி – மங்களூரு ஆகிய வாராந்திர சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல, பயணிகள் எண்ணிக்கை குறைந்து காணப்படுவதால் 10 ரயில்களை ரத்து செய்வதாக கிழக்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படும் 10 ரயில்களை நாளை(மே 19) முதல் மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுவதாக கிழக்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Patrikai.com official YouTube Channel