சென்னை: மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு கோவில்பட்டியில் தமிழக அரசு சார்பில் சிலை வைக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

தமிழ் இலக்கியத்திற்குச் செழுமை சேர்த்த கரிசல்காட்டு எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களுக்கு கோவில்பட்டியில் தமிழக அரசு சார்பில் சிலை அமைக்கப்படும். மேலும், அவர் படித்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி புதுப்பிக்கப்பட்டு அங்கு அவருடைய புகைப்படங்கள் – படைப்புகள் வைக்கப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.