
ஐஎம்டிபி ரேட்டிங்கில் உலக அளவில் 3வது இடத்தை பிடித்த படமாக சூர்யாவின் சூரரைப் போற்று புது சாதனை படைத்திருக்கிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12ம் தேதி அமேசான் பிரைமில் இந்த படத்தை வெளியிட்டார் சுதா கொங்கரா. சூரரைப் போற்று படத்தை பார்த்த அனைவரும் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி ஆகியோரை பாராட்டினார்கள்.
இந்நிலையில் சூரரைப் போற்று படம் புது சாதனை படைத்திருக்கிறது. ஐஎம்டிபியில் அதிக ரேட்டிங் பெற்ற படங்களில் 3வது இடம் சூரரைப் போற்றுக்கு கிடைத்திருக்கிறது. சூரரைப் போற்று படத்திற்கு 9.1 ரேட்டிங் கிடைத்திருக்கிறது.
தி ஷஷாங்க் ரிடெம்ப்ஷன்(1994), தி காட்ஃபாதர்(1972) ஹாலிவுட் படங்களை அடுத்து சூரரைப் போற்றுக்கு தான் அதிக ரேட்டிங் கிடைத்திருக்கிறது.
[youtube-feed feed=1]