
வித்யா பாலன் நடிப்பில் உருவான ‘ஷெர்னி’ திரைப்படம் ஜூன் மாதம் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் நேரடியாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதம்தான் இந்தப் படத்தைப் பற்றிய அறிவிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்யா பாலன் பகிர்ந்திருந்தார்.
தற்போது வெளியீடு குறித்து அமேசான் ப்ரைம் வீடியோ ட்விட்டர் பக்கத்தில், “இவள் தன் தடத்தைப் பதிக்கத் தயாராக இருக்கிறாள். ஷெர்னியை ஜூன் மாதம் ப்ரைமில் சந்தியுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனுடன் படத்தின் போஸ்டரும் பகிரப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் வனத்துக்கு நடுவில், துப்பாக்கியின் குறியில் வித்யா பாலன் சிக்கியிருப்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]She is ready to leave a mark!
Meet the #SherniOnPrime in June. @vidya_balan #AmitMasurkar @vikramix @ShikhaaSharma03 @AasthaTiku @Abundantia_Ent @TSeries pic.twitter.com/4Wx7jEsvgS
— prime video IN (@PrimeVideoIN) May 17, 2021