புதுச்சேரி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, தொற்று பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்து இன்று வீடு திரும்பினார்.

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று புதுச்சேரி முதல்வராக 4 ஆவது முறையாக முதல்வராக மே 7ந்தேதி பதவி ஏற்றார் என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் என்.ரங்கசாமி. அதைத்தொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்ன தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தற்போது நோய்த்தொற்று முழுமையாக குணமடைந்துவிட்டது. இதனால், அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
Patrikai.com official YouTube Channel