சென்னை: பொது இடங்களில் ஆவி பிடித்தல் நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தி உள்ளார்.

தமிழகத்தில் பரவி வரும் தொற்று பரவலை தடுக்க, ஆவி பிடியுங்கள் என்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால், பொதுமக்கள், கொதிக்கும் நீரில், மஞ்சள், வேப்பிலை உள்பட சில தமிழ் மருந்துகளை போட்டு, ஆவி பிடித்து வருகின்றனர். கொரோனா தொற்று தாக்குதலில் முக்கிய பகுதியான தொண்டை மற்றும் சுவாசப்பாதைகளை வைரஸ் தொற்றில்லாமல் பாதுகாக்க பாலில் மஞ்சள் தூள் கலந்து பருகுவது, ஆவி பிடிப்பது, சூடான தண்ணீரை அவ்வப்போது அருந்துவது போன்ற முறைகள் ஊக்குவிக்கப்படுகின்றன. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதை சிலர் பொது இடங்களிலும்  நடத்தி வருகின்றனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளுக்காக ஆவி பிடிக்கும் வசதியை போலீஸார் அறிமுகப்படுத்தினார்கள். இதுபோன்று பொதுமக்கள் கூடும் இடங்களில் ஆவி பிடிப்பதால் கரோனா தொற்றுள்ளவரும் அதில் பங்கேற்க வாய்ப்புண்டு. அதனால் மற்றவர்களுக்கும் தொற்று அதிகரிக்குமே தவிர குறையாது என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்தனர்.

இநத நிலையில், சென்னை  லயோலா கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையத்தை நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் கரோனா தொற்றைத் தவிர்க்க ஆவி பிடித்தல் நிகழ்ச்சியாப் பொது இடங்களில் ஆவி பிடிக்கும் நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என வலியுறுத்தினார். இது தொடர்பாக அவர் அறிக்கையும் வெளியிட்டு உள்ளார்.