சென்னை

மிழகத்தில்  இன்றைய (16/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 33,181 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 15,98,315 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 17,670 பேர் உயிர் இழந்து 13,61,204 பேர் குணம் அடைந்து தற்போது 2,19,342 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 6,247 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 4,38,391 பேர் பாதிக்கப்பட்டு 5,764 பேர் உயிர் இழந்து 3,85,297 பேர் குணம் அடைந்து தற்போது 47,330 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 1,15,532 பேர் பாதிக்கப்பட்டு 872 பேர் உயிர் இழந்து 92,479 பேர் குணம் அடைந்து தற்போது 22,181 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,13,419 பேர் பாதிக்கப்பட்டு 1,230 பேர் உயிர் இழந்து 98,401 பேர் குணம் அடைந்து தற்போது 13,788 பேர் சிகிச்சையில் உள்ளனர்.