டில்லி

கொரோனா தொற்று நேரத்தில் தடுப்பூசி, ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுடன் பிரதமர் மோடியும் காணாமல் போய் விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.

இரண்டாம் அலை கொரோனா பரவலில் நாடு கடும் பாதிப்பு அடைந்துள்ளது.   இந்தியாவில் தினசரி பாதிப்பு கிட்டத்தட்ட 3.43 லட்சமாக உள்ளது.   அகில உலக அளவில் இது முதல் இடத்தில் உள்ளது.  இதுவரை 2.40 கோடி பாதிக்கப்பட்டு 2.62 லட்சம் பேர் உயிர் இழந்து 2.00 கோடி பேர் குணம் அடைந்து 37 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நாடெங்கும் கொரோனா நோயாளிகள் அதிகரித்துள்ளதால் ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் தேவையும் அதிகரித்துள்ளன.   ஆனால் தேவைக்கேற்ப ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் கிடைக்காததால் கடும் பற்றாக்குறை நிலவி வருகிறது.   கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த 1 ஆம் தேதி முதல் 18 வயதைத் தாண்டிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

ஆனால் தடுப்பூசி மருந்து பற்றாக்குறையால் நாட்டில் பெருமாபாலா இடங்களில் இந்த திட்டம் தொடங்கப்படவில்லை.  மத்திய அரசு வழங்கி உள்ள தடுப்பூசி மருந்துகள் இதற்கு முந்தைய கட்டமான 45 வயதை தாண்டியோருக்கு போடவே பற்றாக்குறையாக உள்ளது.   இவை அனைத்துக்கும் பிரதமர் மோடியின் தவறான நிர்வாகமே காரணம் எனப் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில், “தடுப்பூசி, ஆக்சிஜன், மற்றும் மருந்துகளுடன் பிரதமரும் காணாமல் போய் விட்டார்.  இனி மீதம் உள்ளது செண்டிரல் விஸ்தா கட்டுமான திட்டம், மருந்துகள் மீதான ஜி எஸ், டி மற்றும் அங்கும் இங்கும் தென்படும்  பிரதாம்ரின் புகை9ப்படங்கள் மட்டுமே” எனப் பிரதமரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

[youtube-feed feed=1]