
அனுபவ் சின்ஹா இயக்கி, தயாரித்து வெளியான படம் ‘ஆர்டிகிள் 15’. ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்ட இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. தற்போது இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் தயாராகி வருகிறது.
‘ஆர்டிகிள் 15’ தமிழ் ரீமேக்கை போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார்.
இதில் உதயநிதியின் மனைவி கதாபாத்திரத்தில் தான்யா ரவிச்சந்திரன் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், ஆரி, சிவாங்கி உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் ராஜசேகரின் மகளான ஷிவானி ‘ஆர்ட்டிகிள் 15’ தமிழ் ரீமேக்கில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் ஏற்கனவே அன்பறிவு என்ற படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். ‘ஆர்ட்டிகிள் 15’ தமிழ் ரீமேக்கின் முதற்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்து முடிந்த நிலையில், ஊரடங்கு முடிவுக்கு வந்த பின் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
[youtube-feed feed=1]