டில்லி
சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் குறித்து ஆராயக் காங்கிரஸ் கட்சி குழு ஒன்றை அமைத்துள்ளது.
சமீபத்தில் தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த வாக்குகள் இந்த மாதம் 2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. இவற்றில் மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துள்ளது.
இந்த தேர்தலில் புதுச்சேரி மற்றும் தமிழகம் ஆகிய இரு மாநிலங்களிலும் ஆளும் கட்சி தோல்வி அடைந்து புதிய அரசு அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 3 மாநிலங்களிலும் ஆளும் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது. குறிப்பாக மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
இது குறித்து ஆராயக் காங்கிரஸ் கட்சி அசோக் சவான் தலைமையில் ஒரு குழு ஒன்றை காங்கிரஸ் தலைவர் உத்தரவுக்கிணங்க அமைத்துள்ளது. இந்த குழு இன்னும் 2 வாரங்களில் தனது அறிக்கையை அளிக்க உள்ளது.
குழுவின் உறுப்பினர்கள் பின் வருமாறு :
- அசோக் சவான் – தலைவர்
- சல்மான் குர்ஷித் – உறுப்பினர்
- மனிஷ் திவார் – உறுப்பினர்
- வின்செண்ட் எச் பாலா – உறுப்பினர்
- ஜோதி மணி – உறுப்பினர்.