
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
அதோடு மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடைந்த நிலையில், படத்தின் முதல் பாடலை ரம்ஜானை முன்னிட்டு மே 14-ம் தேதி வெளியிடுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்தார் .
இந்நிலையில், வெங்கட்பிரபுவின் தாயாரின் திடீர் மரணம் காரணமாக பாடல் வெளியீட்டை சில தினங்களுக்கு தள்ளி வைத்துள்ளனர். இது தொடர்பாக சுரேஷ் காமாட்சி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
“நம் இஸ்லாமிய உறவுகள் கொண்டாடும் ரம்ஜான் தினத்தன்று வெளியிடுவதாக இருந்த நமது மாநாடு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நமது இயக்குனர் வெங்கட்பிரபு அவர்களின் தாயார் மறைவின் வருத்தத்தில் பங்கு கொள்ளும் பொருட்டு இன்னும் சில நாட்கள் தள்ளி வெளியாக உள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.”
அத்துடன், “இன்னொரு தேதியில் பர்ஸ்ட் சிங்கிள் வெளியிடுவோம். அதற்கான அறிவிப்பை விரைவில் தெரிவிப்போம். நண்பர்களின் துக்கத்தில் பங்கு கொள்வோம்” என குறிப்பிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]நம் இஸ்லாமிய உறவுகள் கொண்டாடும் ரம்ஜான் தினத்தன்று வெளியிடுவதாக இருந்த நமது#மாநாடு படத்தின் first single நமது இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களின் தாயார் மறைவின் வருத்தத்தில் பங்கு கொள்ளும் பொருட்டு இன்னும் சில நாட்கள் தள்ளி வெளியாக உள்ளது என்பதை வருத்தமுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
— sureshkamatchi (@sureshkamatchi) May 11, 2021