
மலையாளத்தின் முன்னணி நடிகையாக வலம்வந்த ரீமா கல்லிங்கல் பத்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்கிறார்.
நடிகை காரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் திலீபுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தது முதல் மலையாள சினிமாவில் உள்ள பெண்களுக்கென்று தனி அமைப்பு தொடங்கியதுவரை அனைத்திலும் முன்நின்றவர் ரீமா கல்லிங்கல்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்குகிறார். இயக்குனராக இவருக்கு முதல் படம் இது. இரண்டு நாயகிகள். ஒருவர் ரீமா கல்லிங்கல், இன்னொருவர் சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன்.
இது இவரது முதல் படம். பிற விவரங்கள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.
Patrikai.com official YouTube Channel