சென்னை: தமிழகத்தில் இன்று 27,397 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 6,846 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், சென்னையில் தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,83,644 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 20,551 பேருக்குத் தொற்று உள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 13,51,362. ஆக உயர்ந்துள்ளது. இன்று தொற்று பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 16,101 பேர். பெண்கள் 11,296 பேர்.
இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 23,110 பேர் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 11,96,549 பேர்.
தலைநகர் சென்னையில் இன்று சிகிச்சையில் பெறுபவர்கள் எண்ணிக்கை (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட): 32,858
இன்று கொரோனா நோய்த் தொற்றினால் 241 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் மொத்தம் 5153 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்தவர்களில் 90 பேர், தனியார் மருத்துவமனையிலும், 151 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 15,412 ஆக உள்ளது.
முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிகளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. இன்று உயிரிழந்தவர்களில் 180 பேர் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்களாவர். எவ்வித பாதிப்பும் இல்லாதவர் 61 பேர்.
மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு:
அரியலூர் 105
செங்கல்பட்டு 2,458
சென்னை 6,846
கோவையில் 2,117
கடலூர் 519
தர்மபுரி 305
திண்டுக்கல் 361
ஈரோட் 779
கல்லக்குரிச்சி 117
காஞ்சீபுரம் 906
கன்னியாகுமரி 542
கரூர் 292
கிருஷ்ணகிரி 429
மதுரை 1,217
நாகப்பட்டினம் 392
நமக்கல் 288
நீலகிரி 148
பெரம்பலூர் .133
புதுக்கோட்டை 208
ராமநாதபுரம் 251
ராணிப்பேட்டை 325
சேலம் .550
சிவகங்கை .136
தென்காசி 120
தஞ்சாவூர் 857
தேனி 521
திருப்பதூர் 318
திருவள்ளூர் 1,284
திருவண்ணாமலை 346
திருவாரூர் 338
தூத்துக்குடி 853
திருநெல்வேலி 674
திருப்பூர் 655
திருச்சி 820
வேலூர் 574
விழுப்புரம் 319
விருதுநகர் 294