ஜெனிவா: சீனானாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆய்வில் 79 சதவிகிதம் அளவுக்கு பாதுகாப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உலக அளவில் கொரோனா வைரசின் பாதிப்பு, தீவிரமாக காணப்படுகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல இடங்களில் மருத்துவ தேவைகளுக்கான மருத்துவ பயன்பாடு உபகரணங்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது.
பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், ஜெனீவாவில் உலக சுகாதார நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து, இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், சினோபார்ம் தடுப்பூசி பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் தரம் ஆகியவற்றிற்கான உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரத்தை பெறும் ஆறாவது தடுப்பூசி என தெரிவித்துள்ளார்.
சினோஃபார்ம் தடுப்பூசியை 45 நாடுகள் பயன்படுத்துகின்றன. ஆனால்,உலக சுகாதார அமைப்பு இதற்கு ஒப்புதல் வழங்காததால், பல நாடுகள் இந்த தடுப்பூசியை பயன்படுத்த தயங்கி வந்தனர்.
தற்போது சினோபார்ம் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், சீனா தயாரித்துள்ள மற்றொரு தடுப்பூசியான, சினோவாக் தடுப்பூசிக்கும் ஓரிரு நாட்களில் உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
சினோபார்ம் தடுப்பூசி 45 நாடுகள் மற்றும் பெரியவர்களில் பயன்படுத்த அதிகார வரம்புகளால் அங்கீகரிக்கப்பட்டது, 65 மில்லியன் டோஸ் நிர்வகிக்கப்படுகிறது என்று அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால் உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரத்தைப் பெறாததால் பல நாடுகள் தடுப்பூசியைப் பயன்படுத்தத் தயங்கி வந்த நிலையில், தற்போது உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கி உள்ளது.