தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது. மே 2 நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணிக் கட்சியினர் 159 இடங்களைக் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (மே 7) காலை தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் நடிகர் விஷால். அத்தோடு முதன் முதலாக போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரான திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் சந்தித்து வாழ்த்துக் கூறியுள்ளார்.