சென்னை: சென்னை போரூர் அருகே உள்ள நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கப்பட்டு வரும் கொரோனா பராமரிப்பு மையம் வரும் 10ந்தேதி தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியால் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு முதல் கட்டமாக 300 படுக்கைகளும், அடுத்தகட்டமாக 500 படுக்கைகளும் என மொத்தம் 800 படுக்கைகளுடன் பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதற்காக 11 கிலோ லிட்டா் கொள்ளளவு கொண்ட சேமிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய பராமரிப்பு மையம் முதல் கட்டமாக 300 படுக்கைகளுடன் வரும் 10-ஆம் தேதி முதல் செயல்பட உள்ளது. அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனை, அரசு ஓமந்தூராா் மருத்துவமனையில் இருந்தும், மருத்துவா்களும், செவிலியா்களும் பணியமா்த்தப்படுவா். இந்த மையத்துக்கான உணவு மற்றும் பராமரிப்புப் பணிகளை பெருநகர சென்னை மாநகராட்சி மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த கொரோனா பராமரிப்பு மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை அமைச்சர்கள் பாா்வையிட்டாா்.
கொரோனா பராமரிப்பு மையத்தை அமைச்சர் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் உடன் சென்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பாா்வையிட்டாா். அப்போது அவர்களுடன் சென்னை மாநகராட்சியின் கொரோனா நோய்த் தொற்று கண்காணிப்பு அலுவலா் எம்.ஏ.சித்திக், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளா் கோ.பிரகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், நந்தம்பாக்கம் கொரோனா பராமரிப்பு மையம் வரும் 10ந்தேதி தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.