1953 ம் ஆண்டு மார்ச் 1 ம் தேதி கலைஞர் மு. கருணாநிதிக்கும் தயாளு அம்மையாருக்கும் மகனாக பிறந்த மு.க.ஸ்டாலின், இன்று 7-5-2021 ல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று தனது இரண்டு தலைமுறை அடையாளத்துடன் முதல்வராக பதவியேற்றிருக்கிறார்.
கூணிக்குறுவதையும் தடாலடியாக காலில் விழுவதையும் எதிர்த்த சுயமரியாதை இயக்கத்தில் இருந்து தன்னை படிப்படியாக இந்த நிலைக்கு உயர்த்திக்கொண்ட ஸ்டாலின், 1964 ம் ஆண்டு தனக்கு 12 வயதாக இருக்கும்போதே அந்த இளவயதில் அண்ணாவின் கொள்கையை ஏற்று கோபாலபுரத்தில் இளைஞர் பாசறை கண்டார், 70 களின் தொடக்கத்தில் சென்னை மாவட்டத்தின் 75வது வார்டு தி.மு.க. பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
சுமார் 50 ஆண்டுக்கும் மேலாக தி.மு.க. வின் இயக்க வரலாற்றில் ஓர் பிரிக்க முடியாத அத்தியாயமாக உருவெடுத்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 50 ஆண்டுகால உழைப்பின் காரணமாக இந்த புதிய உச்சத்தை அடைய அவர் ஏறிய படிகள் ஒன்றல்ல இரண்டல்ல
1964 கோபாலபுரம் திமுக இளைஞர் பாசறை
1968 கோடம்பாக்கத்தில் முதல் பொதுக்கூட்ட பேச்சு
1972 திமுக பொதுக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
1979 திமுக நிர்வாக குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
1980 இளைஞர் அணியை உருவாக்கி அந்த ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார்
1983 இளைஞர் அணியின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டார்
1987 திமுகழகம் அண்ணா அறிவாலயம் கண்டதும் அதுவரை திமுக தலைமையகமாக இருந்த அன்பகத்தை தனது தலைமையிலான இளைஞர் அணிக்கான அலுவகமாக மாற்றி திமுகவில் இளரத்தம் பாய்ச்சி எழுச்சி ஏற்பட வழிவகுத்தார்
1989 ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக தேர்வானார்
1996 மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சென்னை மாநகர மேயராக பதவியேற்றார்
1989, 1996, 2001 மற்றும் 2006 ம் ஆண்டில் ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தெர்ந்தெடுக்கப்பட்டார்
1996 மற்றும் 2001 ல் சென்னை மாநகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
2003 திமுகழகத்தின் துணை பொது செயலாளரானார்
2008 கழகத்தின் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
2009 துணை முதல்வராக நியமிக்கப்பட்டார்
2011, 2016 மற்றும் 2021 ல் கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
2016 முதல் 2021 வரை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டுவந்தார்
2017 தி.மு.க. வின் செயல் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்
2019 ஆகஸ்ட் 28 ல் தி.மு.கழகத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
2021 மே 7 ம் தேதி தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றிருக்கிறார்.
1976 ம் ஆண்டு பிப்ரவரி 2 ம் தேதி மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஸ்டாலின் 1977 ம் ஆண்டு ஜனவரி 27 ம் தேதி வரை, ஓராண்டுகால சிறை கொடுமையை அனுபவித்தார்.
2002 ம் ஆண்டு அப்போது ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. கொண்டு வந்த உள்ளாட்சி அமைப்பு சட்ட திருத்தத்தின் தொடர்ச்சியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் பதவியை பறிகொடுத்தார் இப்படி அவர் ஏறி வந்த படிகளில் தாண்டி வந்த தடைகளும் ஏராளம்.