சென்னை: தமிழக முதல்வராக இன்று பொறுப்பேற்றுக்கொண்ட மு.க.ஸ்டால்ன், தாய்த் தமிழ்நாட்டுக்குச் சேவை செய்திட மாபெரும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி என டிவிட் முலம்  நன்றி தெரிவித்துள்ள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக  மு.க.ஸ்டாலின் இன்று காலை பதவி ஏற்றுக்கொண்டார். ஆளுநர் மாளிகையில் இந்தப் பதவி ஏற்பு விழா எளிமையாக நடைபெற்றது. இதில், மு.க.ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். தொடர்ந்து  33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

பின்னர், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் நினைவிடங்களில் மரியாதை செலுத்திய ஸ்டாலின், அன்பழகன் இல்லத்துக்கு சென்று அவர் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தலைமை செயலகம் சென்ற அவர், ஐந்து கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார்.

அதைத்தொடர்ந்து தன்னை முதல்வராக  தேர்ந்தெடுத்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து டிவிட் போட்டுள்ளார்.

அதில்,   ’முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று கூறி இன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன்! காவிரிக் கரையாம் தஞ்சை மண்ணின் – திருவாரூரைச் சார்ந்த எனக்கு தாய்த் தமிழ்நாட்டுக்குச் சேவை செய்திட மாபெரும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி! என்று தெரிவித்துள்ளார்.