சென்னை: தமிழக முதல்வராக பதவி ஏற்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அதிரடியாக 5 முக்கிய கோப்புகளுக்கு இன்று காலை கையெழுத்திட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவலர்களுக்கு கொரோனா பாதுகாப்பு கவச உடை வாங்க ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு பணியில் காவதுறையினரும் இரவு பகல் பாராது பணியாற்றி வருகின்றனர். இதனால் ஏராளமான காவலர்களும் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு முகக்கவசம் மட்டும் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், PPE கிட் என்றழைக்கப் படும் பாதுகாப்பு கவச உடை, கையுறை, கிருமிநாசினி, முகக்கவசங்களை அரசே வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, ரூ.5 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]