கடந்த வருடம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கடந்த 2020-ம் ஆண்டு இறுதியில் ஓரளவு கட்டுக்குள் வந்தது. இதனால் கொரோனா ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டது.
நிலைமை சரியாகிவிட்டது என நினைக்கும் தருவாயில் கொரோனாவின் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் மீண்டும் தொடங்கி விட்டது. போன முறையை விட இந்த முறை அதி வேகமாக பரவி வருகிறது கொரோனா.
பலரும் கொரோனாவின் 2-வது அலையில் சிக்கித் தவிக்கும் நிலையில் திரைத்துறை நட்சத்திரங்களும் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த கேப்ரியலாவுக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் வெளியான ஏழாம் வகுப்பு c’ பிரிவு என்ற தொலைக்காட்சி தொடரின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை கேப்ரியலா விஜய் டிவியின் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் .
நடிகர் தனுஷின் நடிப்பில் வெளிவந்த 3 திரைப்படத்தின் நடிகை ஸ்ருதிஹாசனின் தங்கச்சியாக அறிமுகமான கேப்ரியலா சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த அப்பா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார்.