வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ளா ‘மாநாடு’ திரைப்படத்தின் டப்பிங் பணிகள் இன்று பூஜையுடன் துவங்கியுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தாலும். ஒருசில கட்டுப்பாடுகளுடன் சின்னத்திரை மற்றும் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்றைய தினம் ‘மாநாடு’ திரைப்படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளன,

இது குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கடவுள் அருளால் மாநாடு படத்தின் டப்பிங் பணிகள் துவங்கி விட்டன’ என பதிவிட்டுள்ளார்.