ஜெய்ப்பூர்: நாடு முழுவதும் பரபரப்பு ஏற்படுத்திய பாலியல் புகழ் பிரபல சாமியார் ஆசாராம் பாபு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த 2 சகோதரிகள் கடந்த 2013ம் ஆண்டு கற்பழிப்பு புகார் கொடுத்தனர். அவர்கள் கொடுத்த புகார் மனுவில், ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் தங்கி இருந்தபோது ஆசாராம் பாபுவும் அவரது மகன் நாராயணன் சாயும் தங்களை சட்ட விரோதமாக அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டு இருந்தனர். இந்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுக்கு தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

80 வயதாகும் ஆசாராம் பாபு சிறையில் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கும், அவருடன் உள்ள மேலும் 12 கைதிகளுக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இதில் சாமியார் ஆசாராம் பாபுக்கு கொ ரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் உள்ள எம்.டி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதால் ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆசாரமை ஜோத்பூர் எய்ம்ஸுக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

[youtube-feed feed=1]