தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளது. மே 2 நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணிக் கட்சியினர் 159 இடங்களைக் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்கவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் முக ஸ்டாலின் அவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்தினார் நடிகர் சத்யராஜ் . அப்பொழுது பெரியார் உருவப்படத்தை முக ஸ்டாலினிடம் வழங்கி வாழ்த்து கூறினார்.