டெல்லி: ‘கோவோவாக்ஸ்’ கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட சோதனை மே 2வது வாரத்தில் தொடங்கலாம் என ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தற்போது கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில், சீரம் நிறுவனம் தயாரித்து வரும் மற்றொரு தடுப்பூசியான கோவாவாக்ஸ் தடுப்பூசியின் 3வது கட்ட மனித சோதனை விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து கூறிய  ஐசிஎம்ஆர் தேசிய எய்ட்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை ஆய்வாளர் டாக்டர் அபிஜித் கதம், கோவாவாக்ஸ் மூன்றாம் கட்ட சோதனை மே மாதம் இரண்டாவது வாரம் தொடங்கலாம் என்று  தெரவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுப்பாடு எழுந்துள்ளது.  தற்போது கோவாக்சின் (Covaxin), கோவிஷீல்டு (Covoshield) ஆகிய இரு தடுப்பூசி மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அமெரிக்க நிறுவனமான நோவாவாக்ஸுடன் (Novavax) இணைந்து, கோவிட் -19 தடுப்பூசி கோவோவாக்ஸ் (Covovax) 3 ஆம் கட்ட பரிசோதனையை தொடங்க விண்ணப்பத்திருந்தது. இதற்கு   இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு  ஒப்புதல் அளித்துள்ளது.

கோவோவாக்ஸ் தடுப்பு மருந்தின் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனையில் பங்கேற்ற 200 பேரின் தரவுகளை மதிப்பாய்வு செய்த பிறகு இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கோவோவாக்ஸ் (Covovax) மூன்றாம் கட்ட சோதனை மே மாதம் இரண்டாவது வாரம் தொடங்க உள்ளது.,