சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில், கொரோனா மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் துணை-மருத்துவப் பணியாளர்களுக்கு, இந்தாண்டின் ஜூன் மாதம் வரை, ஊக்கத்தொகையை அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாகுர்.
இந்த அறிவிப்பின்படி, கொரோனா பணியில் ஈடுபட்டிருக்கும் 4வது மற்றும் 5வது ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்கள், ஒப்பந்த மருத்துவர்கள் மற்றும் ஜூனியர்/சீனியர் தங்குமிட பணியாளர்கள் ஆகியோருக்கு, ரூ.3000 மாதாந்திர ஊக்கத்தொகை வழங்கப்படும்.
செவிலியர் படிப்பு மாணாக்கர்கள், பொது நர்சிங் மற்றும் மூன்றாமாண்டு மருத்துவச்சி படிப்பை மேற்கொள்வோர், ஒப்பந்த ஆய்வகப் பணியாளர்கள் ஆகியோருக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும்.
இமாச்சலப் பிரதேச முதல்வர் கங்க்ரா மாவட்டத்தின் பராவுரிலுள்ள ராதாசுவாமி சட்சங் வியாசுக்கு சென்றார். அங்கு, அடுத்த 10 நாட்களுக்குள் 250 படுக்கைகளை அதிகரிக்க வேண்டுமென அவர் உத்தரவிட்டார்.