டெல்லி:  டெல்லியில் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள  ஆட்டோ ரிக்சா, டாக்சி ஓட்டுநர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என மாநில முதல்வர் அரவிந்த்  கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இரு மாதம் இலவசமாக உணவுபொருள் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் தொற்று பரவல் உச்சமடைந்துள்ளது. தினசரி பாதிப்பபு மூணரை லட்சத்தை கடந்துள்ளது.  தலைநகர் டெல்லியிலும் தினசரி பாதிப்பு 15ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் தொற்று பாதிப்பு காரணமாக, ஆக்சிஜன் உள்பட மருந்துகளும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக  அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக கடுமையான பொருளாதார இழப்பை சநதித்துள்ள ஆட்டோ ரிக்ஷா மற்றும் டேக்ஸி டிரைவர்களுக்கு ரூ 5 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படும் என்று டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மேலும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த தொழிலாளர்களுக்கு சிறிய உதவியாக இந்தத் தொகை இருக்கும் எனவும் ,

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடையில் 2 மாதங்க்ளுக்கு இலவசமாக பொருள்கள் வழங்கப்படும் என்றும் இதனால் 72 லட்சம் பேர் பயன்பெறுவர் என்றும் அறிவித்துள்ளார்.