சென்னை: சமூகஆர்வலர் டிராபிக் ராமசாமி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது.

நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் சில ஆதரவாளர்களுக்காக தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட டிராபிக் ராமசாமி, உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், ஏப்ரல் 20ந்தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அவரது நலம் விரும்பிகள் அனுமதித்தனர்.
அவருக்கு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கிச்சைகள் அளித்து வரும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel