சென்னை: தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் அவசர தேவைகளுக்காக லண்டனில்  ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றி வந்த விமானம் தமிழகம் வந்தடைந்துள்ளது.

ஏற்கனவே  குவைத்திலிருந்து 282 சிலிண்டர்கள், 60 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், வென்டிலேட்டர்கள் மற்றும் பிற மருத்துவப் பொருட்களைக் கொண்டு வந்த விமானம் இன்று காலை இந்தியா வந்தடைந்தது. அதைத் தொடர்ந்து யுகேவில் இருந்து மேலும்  450 ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் விமானம் வந்தடைந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்துள்ளது. தமிழகத்திலும் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால்வ பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு  வழங்கப்படும்  சிகிச்சைக்கான படுக்கைகள், மருந்துகள்  மற்றும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில்,  லண்டனில் இருந்து இந்திய விமானப்படை சிறப்பு விமானம் மூலம் 46.6 லிட்டர் திறன் கொண்ட 450 ஆக்சிஜன் சிலிண்டர்கள் இன்று அதிகாலை தமிழகம் வந்தடைந்தன.