டெல்லி: நாடு முழுவதும கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 2 லட்சத்து 82 ஆயிரத்து 833ஆக அதிகரித்துள்ளது
நாடு முழுவதும் கடந்த சில நாள்களாகக் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. உலக அளவில் ஒருநாள் பாதிப்பில் இந்தியா முதலிடத்திலும் மொத்த பாதிப்பில் 2வது இடத்திலும் உள்ளது.
இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, நேற்றுஒரே நாளில் 3லட்சத்து 57 ஆயிரத்து 229 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த எண்ணிக்கை 2 கோடியே 2 லட்சத்து 82 ஆயிரத்து 833ஆக அதிகரித்துள்ளது.
குறிப்பாக, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் அதிகளவிலான கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 3,449 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 22 ஆயிரத்து 408 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 3லட்சத்து 20ஆயிரத்து 289 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 66 லட்சத்து 13 ஆயிரத்து 292ஆக உள்ளது.
தற்போதைய நிலையில் , 34 லட்சத்து 47 ஆயிரத்து 133 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இதுவரை மொத்தமாக 15 கோடியே 89 லட்சத்து 32 ஆயிரத்து 921 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.