‘அலா வைகுந்தபுரம்லோ’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் மகேஷ் பாபு – த்ரிவிக்ரம் இணையப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தக் கூட்டணி ‘அத்தடு’ மற்றும் ‘கலேஜா’ ஆகிய படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளது. நீண்ட நாட்களாகப் பேச்சுவார்த்தை நிலையிலிருந்த இந்தக் கூட்டணி, தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மகேஷ் பாபு நடிப்பில் உருவாகும் 28-வது படமாக இது உருவாகவுள்ளது. ஹாரிகா மற்றும் ஹாசினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.

2022-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/haarikahassine/status/1388463560074752000