
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளது. நேற்று (மே 2) நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணிக் கட்சியினர் 159 இடங்களைக் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்கவுள்ளார்.
இன்று (மே 3) திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நடிகர் சூரி நேரில் சந்தித்து தனது வாழ்த்தைத் தெரிவித்தார்.
அப்போது சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார். உதயநிதி ஸ்டாலின் – சூரி இருவருமே சில படங்களில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel