தென்காசி மாவட்டத்தில் அமைந்த சங்கரன்கோயில் தொகுதியை, திமுக, 32 ஆண்டுகளுக்குப் பிறகு கைப்பற்றியுள்ளது. இந்த சங்கரன்கோயிலை கடந்த 1977ம் ஆண்டில் வென்றபிறகு, அதிமுக பிளவுபட்ட 1989 தேர்தலில்தான் மூன்றாவது முறையாக வென்றது திமுக.

அதன்பிறகு, ஜெயலலிதா எதிர்ப்பலை வீசிய 1996 தேர்தலில்கூட, திமுகவால் அத்தொகுதியை வெல்ல முடியவில்லை. இந்நிலையில், வேறுசில எளிதான தொகுதிகளிலெல்லாம் தோற்ற திமுக, எதிர்பாராத வகையில், இரட்டை இலையின் கோட்டையான சங்கரன்கோயில் தொகுதியில் வென்றுள்ளது.

இத்தொகுதியில், அதிமுக சார்பாக போட்டியிட்ட அமைச்சர் ராஜலட்சுமியை, திமுக வேட்பாளர் ராஜா, சுமார் 5000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார். சங்கரன்கோயில் வெற்றியானது திமுக முகாமில் மகிழ்ச்சியுடன் பார்க்கப்படுகிறது.