பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார் என மூத்த இயக்குனர்ககுடன் இணைந்து வந்த ரஜினி கபாலியில் இருந்து தனது பாதையை மாற்றினார்.

ரஞ்சித் இயக்கத்தில் கபாலி, காலா ; ரஞ்சித் இயக்கத்தில் கபாலி, காலா ; ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் என தன பாதையை மாற்றினார்.

தற்போது அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு உள்பட ஏராளமானோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமியுடன் ரஜினி அடுத்த படத்தை அறிவிக்க உள்ளார் .

அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையும்போது ரஜினி – தேசிங்கு பெரியசாமி இணையும் படம் குறித்து அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .