2005-ல் மயூகம் மலையாளப் படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தவர் மம்தா மோகன்தாஸ். 2006-ல் கரு.பழனியப்பனின் சிவப்பதிகாரம் படத்தில் விஷாலுடன் நடித்தார்.
2010-ல் தெலுங்கில் நடித்த மம்தா மோகன்தாஸ், 11 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தெலுங்கில் நடிக்கிறார்.
இதனிடையில் இருமுறை கேன்சர் பாதிப்புக்குள்ளானார் மம்தா. இருமுறையும் தைரியமாகப் போராடி தற்போது கேன்சரிலிருந்து முழுமையாக மீண்டுள்ளார்.
சுமார் 9 வருடங்களுக்குப் பிறகு தமிழில் விஷாலின் எனிமி படத்தில் நடித்துள்ளார் மம்தா மோகன்தாஸ்.
தினொரு வருடங்கள் தெலுங்குப் படத்தில் நடிக்காமலிருந்த மம்தா, இந்த வருடம், லால்பாக் என்ற தெலுங்குப் படத்தில் நடிக்கிறார். இப்படம் தெலுங்கு, மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் தயாராகிறது.
இந்த படத்தை பிரசாந்த் முரளி இயக்க, மம்தா மோகன்தாஸ், ராகுல் மாதவ், சிஜோய் வர்க்கீஸ் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.