சென்னை: தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலின் உடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் காவல்துறை டி.ஜி.பி திரிபாதி ஆகியோர் சந்தித்து ஆலேசானை நடத்தின்ர். இவர்களுடன் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் சந்தித்தார்.

நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. திமுக நேரடியாக 125 இடங்கள் முன்னிலை பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வராக வரும் 7ந்தேதி வெள்ளிக்கிழமை பதவி ஏற்க உள்ளார்.
இதன் காரணமாக, மு.க.ஸ்டாலினை தமிழக உயர்அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்று முதல்வர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமியும் ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய அரசு அமைக்க கவர்னரை சந்தித்து அழைப்பு விடுக்க திமுக நாளை கோரிக்கை விடுக்கிறது.
இந்த நிலையில், தமிழக தலைமைச்செயலாளர், காவல்துறை டிஜிபி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, கொரோனா நிலவரம், அதன் தடுப்பு நடவடிக்கை, கொரோனா ஊரடங்கு, பதவி ஏற்பு நிகழ்வு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]