சென்னை: தமிழக முதல்வராக வரும் 7-ம் தேதி வெள்ளிக்கிழமை மு.க.ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 159 இடங்களில் முன்னிலை பெற்று உள்ளது. இதில் திமுக நேரடியாக 125 இடங்கள் முன்னிலையில் உள்ள நிலையில், தனி பெரும்பான்மையுடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வர் பொறுப்பேற்கப்போகிறார் .
முதல்வர் பதவி ஏற்பும் விழா கவர்னர் மாளிகையில் எளிமையாக நடைபெறும் என ஏற்கனவே தெரிவித்துள்ள ஸ்டாலின், வரும் 7ந்தேதி முதல்வராக பதவி ஏற்க இருப்பதாக கூறப்படுகிறது. அவருடன் தமிழக அமைச்சரவையும் பதவி ஏற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலில் வெற்றிபெற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் இருந்து, சற்றுமுன் கோபாலபுரம் இல்லத்திற்கு வருகை தந்துள்ளார். அங்கு தாயார் தயாளுஅம்மாளுடன் ஆசி பெறுவதுடன், அங்குள்ள கலைஞர் உருவப்படத்துக்கு மரியாதை செய்கிறார்.,
ஸ்டாலின் கோபாலபுரம் வருகையைத் தொடர்ந்து திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பத்திரிகையாளர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.
திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதில், திமுக 125 இங்களிலும், காங்கிரஸ் கட்சி 18 இடங்களிலும், மதிமுக 4 இடங்களிலும், விசிக 4 இடங்களி லும், சிபிஐ 2, சிபிஎம் 2, மற்றவை 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி 75 இடங்களையும் கைப்பற்றி உள்ள நிலையில் அமைச்சர்கள் 11 பேர் தோல்வியும், 16 பேர் வெற்றியும் அடைந்துள்ளனர்.