சென்னை: கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நள்ளிரவு வெற்றிச்சான்றிதழுடன் அண்ணா கருணாநிதி சமாதியில் நள்ளிரவில் அஞ்சலி செலுத்தினார்.
தமிழகத்தில் நேற்று (மே 2ந்தேதி) காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்தது. திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.
சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார்.இந்த தேர்தலில் திமுக தலைவர் முக ஸ்டாலின் 1,04,462 வாக்குகள் பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆதி ராஜாராம் 34,462 வாக்குகள் பெற்றார். இதனால், 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மு.க ஸ்டாலின் வெற்றி பெற்றார்.
வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற லயோலா கல்லூரிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வருகை தந்தார். அவரிடம், தேர்தல் அலுவலர் வெற்றிச்சான்றிதழை வழங்கினார்.
வெற்றிச்சான்றிதழை பெற்றுக்கொண்டு நள்ளிரவிலேயெ மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணாதுரை மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் வெற்றி பெற்ற சான்றிதழை வைத்து மரியாதை செலுத்தினார்.
ஸ்டாலின் மெரினா வருவதை அறிந்துகொண்ட திமுக தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் இரவில் மெரீனா கடற்கரையில் திமுக தொண்டர்கள்,நிர்வாகிகள் குவிந்தனர்.