டில்லி
இந்தியாவில் நேற்று 3,69,942 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,69,942 பேர் அதிகரித்து மொத்தம் 1,99,19,715 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,421 அதிகரித்து மொத்தம் 2,18,945 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 2,99,800 பேர் குணமாகி இதுவரை 1,62,81,738 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 34,10,426 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 56,647 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 47,22,401 ஆகி உள்ளது நேற்று 669 பேர் உயிர் இழந்து மொத்தம் 70,284 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 51,356 பேர் குணமடைந்து மொத்தம் 39,81,658 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 6,68,353 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 31,959 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 16,38,779 ஆகி உள்ளது. இதில் நேற்று 49 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,406 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 16,296 பேர் குணமடைந்து மொத்தம் 12,93,590 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3,39,438 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 37,733 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 16,01,865 ஆகி உள்ளது இதில் நேற்று 217 பேர் உயிர் இழந்து மொத்தம் 16,011 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 21,148 பேர் குணமடைந்து மொத்தம் 11,64,398 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4,21,436 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் நேற்று 30,857 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 13,13,361 ஆகி உள்ளது. நேற்று 153 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,162 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 36,650 பேர் குணமடைந்து மொத்தம் 10,04,447 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,95,762 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 20,768 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 12,07,112 ஆகி உள்ளது இதில் நேற்று 153 பேர் உயிர் இழந்து மொத்தம் 14,346 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 17,576 பேர் குணமடைந்து மொத்தம் 10,72,522 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,20,444 பேர் சிகிச்சையில் உள்ளனர்.