டில்லி

டில்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தந்தை கொரோனாவால் உயிர் இழந்துள்ளார்.

இரண்டாம் அலை கொரோனா பரவலால் டில்லியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  நேற்று ஒரே நாளில் இங்கு 25 ஆயிரத்துகும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 412 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 11,74,552 பேர் பாதிக்கப்பட்டு 16,559 பேர் உயிர் இழந்துள்ளனர்.

டில்லியில் தற்போது 96,347 பேருக்கு பாதிப்பு உள்ளது.  எனவே மருத்துமனைகளில் இடப்பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை எனபல துன்பங்களை இங்குள்ள மக்கள் அனுபவித்து வருகின்றனர்.   டில்லி முதல்வர் மற்றும் சுகாதார அமைச்சர் இதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்,

”நமது சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் இன்று கொரோனாவால் அவரது தந்தையை இழந்ததால் நான் மிகவும் சோகம் அடைந்துள்ளேன்.  சத்யேந்தர் நாள் முழுவதும் டில்லி மகக்ளுக்காக களைப்பின்றி பணியாற்றி வருகிறார்.

இறைவன் மரணம்டைந்தவர் ஆன்மாவுக்கு ஆசி அளிக்க வேண்டும் என்னும் வேண்டுதலுடன் எனது வருத்தங்களை அவர் குடும்பத்துக்கு தெரிவித்துக் கொள்கிறேன்”

என டிவிட்டரில் பதிந்துள்ளார்.