கொல்கத்தா

திடீர் திருப்பமாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது தொகுதியில் முன்னிலைக்கு வந்துள்ளார்.

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடந்து வருகிறது.   இதில் திருணாமுல் முதல் இடத்தில் முன்னிலையில் உள்ள போதிலும் அக்கட்சி தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி பின்னடைவில் இருந்தார்.

தற்போது முடிவடைந்துள்ள வாக்கு எண்ணிக்கை சுற்றில் மம்தா பானர்ஜி 1400க்கும் மேற்பட்ட வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலைக்கு வந்துள்ளார்.  தற்போது திருணாகுல் 201 இடங்களிலு, பாஜக 89 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

மேற்கு வங்கத்தில் திருணாமுல் தொண்டர்கள் பல இடங்களில் ஆடிப்பாடி இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.