சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை எழுந்துள்ள நிலையில், தமிழகத்திற்கு மேலும் 4 லட்சத்து 20 ஆயிரத்து 570 கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் இன்று மாலை 5.20மணிக்கு விமானம் மூலம் வர இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.  தமிழகத்திற்கு  இதுவரை 96.18 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. நேற்று வரை 87 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. 4.93 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது, இவை  நாளையுடன் தீர்ந்து விடும் . அதனால், 3ந்தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், ஜூன் மாதத்திற்கான தடுப்பூசி தொகுதிப்பு மத்தியஅரசிடம்  இருந்து கிடைத்ததும் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் எ;னறும், மேலும்,  தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்கான  ஒதுக்கீடாக 42.58 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்க வேண்டியதிருப்பதாகவும்  தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று மாலை மேலும் 4,20,570 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி இன்று மாலை விமானம் மூலம் சென்னை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தடுப்பூசியானது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடுவதற்காக ஒதுக்கப்பட்டது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி, தடங்கலின்றி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.