கொல்கத்தா
நாளை முதல் கொரோனா பரவலைத் தடுக்க மேற்கு வங்க மாநிலத்தில் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவலால் பாதிப்பு மிவும் அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பு உலக அளவில் மிக அதிகமாக உள்ளது. இங்கு தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3.8 கோடியை விட அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் மேற்கு வங்கமும் ஒன்றாகும். .
மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 17,403 பேருக்குப் பாதிப்பு உண்டாகி நேற்றுவரை 8.11 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றுவரிஅ 11,248 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று வரை 1,10 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று அங்குச் சட்டப்பேரவை தேர்தல் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.
இன்று மேற்கு வங்க அரசு பல புதிய தீவிர கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி வணிக வளாகங்கள், மால்கள், அழகு நிலையங்கள், திரையரங்குகள், உணவு விடுதிகள், மது பான விடுதிகள், உடற்பயிற்சி கூடங்கள், உள்ளிட்ட அனைத்தும் மூடப்படுகிறன. மேலும் மளிகைக் கடைகளும் காய்கறிக் கடைகளும் காலை 7 மணி முதல் 10 மணி வரை மற்றும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை மட்டுமே இயங்க உள்ளன.