சென்னை: வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே2ந்தேதி கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமுடக்கம் அமலில் உள்ளதால், அன்றைய தினம் பட்டாசு வெடிப்பு உள்பட வெற்றிக் கொண்டாட்டங் களுக்கு சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் ஏற்கனவே மே2ந்தேதி வாக்கு எண்ணிக்கை அன்று வெற்றி கொண்டாட்டங்களுக்கு ஏற்கனவே தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், தற்போது உயர்நீதி மன்றமும் தடை விதித்துள்ளது.
மேலும், ஓட்டு எண்ணிக்கையின்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், வாக்கு எண்ணிக்கை அன்று பட்டாசு வெடிப்பதற்கும், வெற்றி கொண்டாட்டங்கள், ஊர்வலங்களையும் நடத்தக்கூடாது என்று உத்தரவிட்டதுடன், அன்றைய தினம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்களை கட்டுக்குள் வைத்து முன் உதாரணமாக திகழ வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.
ஓட்டு எண்ணிக்கை தினத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாகவும் கூறியுள்ளது.