தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளரும் பிரபல இயக்குனருமான கேவி ஆனந்த் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு கொரோனா நோய் தொற்றும் இருந்துள்ளது.

கே.வி.ஆனந்த் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

மதிப்பிற்குரிய கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும் என கூறியுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘சிவாஜி’ படத்தில் கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.