தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததால் கடந்த 26-ம் தேதி முதல் திரையரங்குகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார் திரைப்படம், திரையரங்கில் வெளியாக காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்பொழுது திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் காரணமாக, ஹாட்ஸ்டார் வலைதளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய 26 படங்களை டிஜிட்டலுக்கு மாற்றும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் அந்த பணி முடிந்த பின்னர் ஓடிடி தளத்தில் வரிசையாக அந்தப் படங்களை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.