தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளரும் பிரபல இயக்குனருமான கேவி ஆனந்த் இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு கொரோனா நோய் தொற்றும் இருந்துள்ளது.
20 நாட்களுக்குமுன் கேவி ஆனந்த் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார். பின்னர் கடந்த வாரம் இவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. சோதனை செய்து கொண்டதில் இவரை தவிர மனைவி மகள்கள் இரண்டு பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது.
மறுபடியும் 24-ஆம் தேதி மியாட் மருத்துவமனையில் அவருக்கு, சிடி ஸ்கேன் மூலம் சோதனை செய்யப்பட்டது. அதில் தொற்று இருப்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை மூன்று மணியளவில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் 5 நிமிடங்கள் அஞ்சலிக்காக எடுத்து வரப்பட்டது. முழுவதுமாக மூடப்பட்ட உடல் ஆம்புலன்ஸ் உள்ள கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப் பட்டிருந்தது. பின்னர் மின் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.