டில்லி
இந்தியாவில் நேற்று 3,86,654 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,86,654 பேர் அதிகரித்து மொத்தம் 1,87,54,984 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,501 அதிகரித்து மொத்தம் 2,08,313 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 2,91,484 பேர் குணமாகி இதுவரை 1,53,73,765 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 31,64,825 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 66,159 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 45,39,553 ஆகி உள்ளது நேற்று 771 பேர் உயிர் இழந்து மொத்தம் 67,985 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 68,537 பேர் குணமடைந்து மொத்தம் 37,99,266 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 6,70,301 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 35,024 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 15,33,985 ஆகி உள்ளது. இதில் நேற்று 48 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,260 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 21,116 பேர் குணமடைந்து மொத்தம் 12,44,301 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,84,085 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 35,024 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 14,74,846 ஆகி உள்ளது இதில் நேற்று 270 பேர் உயிர் இழந்து மொத்தம் 15,306 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 14,141 பேர் குணமடைந்து மொத்தம் 11,10,025 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3,49,496 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் நேற்று 35,104 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 12,17,952 ஆகி உள்ளது. நேற்று 295 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 12,238 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 25,613 பேர் குணமடைந்து மொத்தம் 8,96,477 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3,09,237 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 17,897 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 11,48,064 ஆகி உள்ளது இதில் நேற்று 107 பேர் உயிர் இழந்து மொத்தம் 13,933 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 15,542 பேர் குணமடைந்து மொத்தம் 10,21,575 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,12,556 பேர் சிகிச்சையில் உள்ளனர்.