சென்னை: தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டமாக தலைநகர் சென்னை திகழ்கிறது. இந்த நிலையில், நோயாளிகளின் தேவைக்காக கூடுதலாக 500 படுக்கைகள் அமைக்கப்பட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
அதன்படி, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 250 படுக்கைகளுடன் கூடிய கொரோனா வார்டும், சென்னை எழும்பூரில் உள்ள மகப்பேறு மருத்துவனையில் ((IOG – Institute of Obstetrics and Gynaecology) 250 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டும் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த வார்டுகள் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.