லண்டன்: தடுப்பூசியின் ஒரு டோஸ் தொற்று பரவலை பாதி அளவில் குறைக்கும் என்னு ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. இங்கிலாந்து பொது சுகாதாரத்துறை ((Public Health England )  நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஏராளமான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இதில் பல தடுப்பு மருந்துகள் பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பபட்டு வருகின்றன. வெளி நாடுகளில் ஃபைசர்,  அஸ்ட்ராஜெனெகா , ஸ்புட்னிக்-வி உள்பட பல தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.

இந்த நிலையில்,  ஒரு கொரோனா வைரஸ் தடுப்பூசியின் ஒரு டோஸ், வைரசின் பரவலின் பாதி அளவை குறைப்பதாக இங்கிலாந்து பொது சுகாதாரத்துறையினர் நடத்திய ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து  கூறிய சுகாதாரத்துறை  செயலாளர் மாட் ஹான்காக் (Health Secretary Matt Hancoc)  ஆய்வின் முடிவுகளை, உலக மக்களுக்கு இது ஒரு  “பயங்கர செய்தி” என்று விவரித்துள்ளார்.

‘ஃபைசர் மற்றும் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளின் முதல் டோஸ் வழங்கப்பட்டவர்கள்  மூன்று வாரங்களுக்குப் பிறகு நோய்த்தொற்றுக்கு ஆளானவர்கள் – தொற்று பாதிக்கப்பட்ட நபர்களைக் காட்டிலும் 38% முதல் 49% வரை  தொற்றின் பாதிப்பில் இருந்து தடுக்கப்படும்  வாய்ப்பை PHE கண்டறிந்துள்ளது. அதனால்,  ஒவ்வொருவரும் தங்களது தடுப்பூசிகளை‘ தவறாது பெற வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆய்வுகள் குறித்து PHE வெளியிட்டுள்ள  அறிக்கையில், கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 14 நாட்களுக்கு பிறகு, அவர்களிடம் கொரோனா தடுப்புக்கு எதிரான அறிகுறி காணப்பபட்டது என்றும்,  இதனால், தொற்று பரவலில் இருந்து அவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள் என்று  தெரிவித்துள்ளது.

தடுப்பூசி ஒரு டோஸ்  எடுக்கப்பட்ட நான்கு வாரங்களுக்குப் பிறகு. தடுப்பூசி போட்டுக் காண்ட நபர், தொற்று பாதிப்பு அறிகுறி அபாயத்தில்  60 முதல் 65% வரை பாதுகாக்கப்படுகிறார் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்கள், பெரும்பாலானவர்கள் 60 வயதிற்குட்பட்டவர்கள் ,  சுமார்  24,000 வீடுகளில் இருந்து 57,000 க்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்டதாகவும்,  கிட்டத்தட்ட ஒரு மில்லியன் தொடர்புகளுடன் ஒப்பிடப்படாத வழக்குகளுடன் ஒப்பிடுகையில் தடுப்பூசி சிறந்த பலனை தந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வு குறித்து கூறிய  PHE இன் நோய்த்தடுப்புத் தலைவரான டாக்டர் மேரி ராம்சே, “மக்கள் சாதாரண வாழ்க்கை முறைக்குத் திரும்பு வதற்கு தடுப்பூசிகள் மிக முக்கியமானவை. தடுப்பூசிகள் நோயின் தீவிரத்தை குறைப்பது மட்டுமல்லாமல், ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான இறப்புகளைத் தடுத்து வருகிறது. தொற்று பரவல் மற்றவர்களுக்கு பரவுவதை குறைப்பதில் கூடுதல் தாக்கம் உள்ளது ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. இது தங்களுக்கு  பெரும் ஊக்கத்தை  தந்துள்ளது என்று கூறியவர்,  இருந்தாலும் மக்கள்  தொடர்ந்து, பாதுகாப்புடன் செயல்படுவது முக்கியம் என்று கூறினார்.

மேலும், தொற்று பாதிப்பில் இருந்து தங்களை பாதுகாத்துக்காள்ள  கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல்,  சமூக இடைவெளி, முக்கவசம் அணிவதையும் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

இந்த ஆய்வு குறித்து கருத்து தெரிவித்த, வார்விக் பல்கலைக்கழக தொற்றுநோயியல் நிபுணர் மைக் டில்டெஸ்லி கூறுகையில், கண்டுபிடிப்புகள் குறிப்பிடத்தக்கவை, தொற்று பரவலானது, மக்களை  தடுப்பூசியை  எடுக்க  அழுத்தம் கொடுத்தன.  அதேவேளையில், “இந்த தடுப்பூசிகள் கடுமையான அறிகுறிகளைத் தடுப்பதிலோ அல்லது உங்களைத் தொற்றிக் கொள்ள அனுமதிப்பதிலோ 100% பயனுள்ளதாக இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும், ஆனால், அவை, குறைந்தபட்சம் ஓரளவு பாதுகாப்பை அளிக்கின்றன.

மக்கள் தொற்றின் தாக்கத்தில் இருந்து  அதிக அளவிலான பாதுகாப்பைப் பெறுவதற்கும், கொரோனாதொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும்,  முடிந்தவரை அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும் என்பதற்கு  இந்த ஆய்வு கூடுதல் சான்று என்று தெரிவித்துள்ளார்.

நோய்த்தொற்று அதிக அளவிலான பரவுவதற்கான வாய்ப்புகள் வீடுகளே என்றவர், தடுப்பூசிகள் வைரஸ் பரவுவதை மெதுவாக்குவதோடு உயிரைக் காப்பாற்றுவதில் தடுப்பூசிகள் சிறப்பாக பணியாற்றுகிறது, சுமார் பாதிய அளவு தொற்று பரவலை குறைக்கிறது  என்பதற்கு கிடைத்த சமீபத்திய முக்கிய  ஆதாரம் இந்த ஆய்வு முடிவுகள என்று தெரிவித்துள்ளார்.,

முந்தைய PHE ஆய்வுகள், ஃபைசர்-பயோஎன்டெக் மற்றும் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகள் வயதானவர்களிடையே கோவிட் -19 நோய்த்தொற்றுகளைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும்,  மார்ச் மாத இறுதிக்குள் 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 10,400 இறப்புகள் தடுப்பூசியால் தடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.