குவாலியர்: மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் வார்டில், இறந்த கொரோனா நோயாளியின் உடலை எடுக்காமல்  மருத்துவமனை அலட்சியம் காட்டியது.  இது அந்த வார்டில் உள்ள சக நோயாளி களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது.

மத்தியபிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இருந்து வருகிறார். அவரது தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்ற வருகிறது.  மாநிலத்தில் தொற்று பரவலை எதிர்கொள்வதில் பாஜக அரசு தோல்வி அடைந்துள்ளது.

இந்த நிலையில், குவாலியரில்  உள்ள  அரசு மாவட்ட தலைமையக மருத்துவமனையில் நேற்று (ஏப். 28) பிற்பகல் கொரோனா நோயாளி ஒருவர் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அந்த உடலை வெள்ளைத்துணியால் சுற்றி மருத்துவமனை ஊழியர்கள், அப்படியே, அதே பெட்டில் வைத்து விட்டு சென்றுவிட்டனர். சுமார் 24 மணி நேரமாக அந்த உடல் கவனிப்பாரற்றுக் கிடந்தது.

இதை கண்ட சக நோயாளிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். இது தொடர்பாக பல முறையில் மருத்துவமனையில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்க வில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதி  காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் சதீஷ் சிகர்வார் மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசினார். அதனையடுத்து, 24 மணி நேரத்திற்கு பிறகே இறந்த கொரோனா நோயாளியின் உடலை அங்கிருந்து மருத்துவமனை நிர்வாகம் எடுத்துச் சென்றது.

மாநில அரசின் மெத்தனப்போக்கு காரணமாகவே கொரோனா தீவிரமடைந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்ட வரும் நிலையில், இறந்த நோயாளியின் உடலை, சக நோயாகிளுக்கு இடையே போட்டு அச்சத்தை உருவாக்கிய பாஜக மாநில அரசின் செயல் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

[youtube-feed feed=1]